search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabi Lamichhane"

    • போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை பெற்றதாக துணை பிரதமர் மீது வழக்கு தொடரப்பட்டது.
    • குற்றம் நிரூபணமானதால் துணை பிரதமர், உள்துறை அமைச்சர் பதவிகளிலிருந்து அவர் விலகினார்.

    காத்மண்டு:

    நேபாளம் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் ராபி லாமிச்சனே. இவர் முக்கிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை மந்திரியுமாகவும் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, துணை பிரதரான ராபி லாமிச்சனே போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்தது ஆகிய குற்றங்கள் செய்ததாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி ஹரி கிருஷ்ணா கார்கி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு ராபி லாமிச்சனே ஆஜரானார்.

    இந்நிலையில், ராபி லாமிச்சனே அமெரிக்க குடியுரிமை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் நேபாள குடியுரிமை பெற்றுள்ளார். எனவே இவரது நேபாள குடியுரிமை செல்லாது, அவர் குற்றவாளி என அறிவித்தது.

    இதையடுத்து துணை பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பதவியிலிருந்து ராபி லாமிச்சனே நீக்கப்பட்டார்.

    ×