search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congressional walk in"

    • காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.
    • முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதியில் நடைபயணம் தொடங்கியது. முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே தொடங்கிய நடைபயணத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.

    இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைந்தது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் கையோடு கைகோர்ப்போம் என்ற நடைபயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

    இதன்படி புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக ஒற்றுமை நடைபயணம் நடக்க உள்ளது. முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதியில் நடைபயணம் தொடங்கியது.

    முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே தொடங்கிய நடைபயணத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நடைபயணத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், கிருஷ்ணராஜ், ராஜாகுமார், மாவட்ட தலைவர் வேல்முருகன், மகிளா காங்கிரஸ் விஜயகுமாரி, ஜெயலட்சுமி, சந்திரிகா, நிர்வாகிகள் லட்சுமிகாந்தன், முத்துராமன், தனுசு, மருதுபாண்டி, ராஜேந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நடைபயணம் முத்தியால்பேட்டை முழுவதும் சுற்றி வ ந்தது. நடைபயணத்தின்போது காங்கிரசார் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீசில் புதுவைக்கு மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, மத்திய நிதி கமிஷனில் சேர்ப்பு, ரூ.3 ஆயிரம் கோடி மானியம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு அளித்தது. இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படவில்லை. விவசா யிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. ரேஷன்கடைகளை திறக்கவில்லை. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீட்டால் முதல்-அமைச்சர் அடிபணிந்து அடிமை ஆட்சி நடத்துகிறார். எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

    ×