என் மலர்
நீங்கள் தேடியது "அம்பத்தூர் வீடு கொள்ளை"
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை பி.ஜி.என். சாந்தி நகர் தேவதாஸ் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. மத்திய பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று வரலட்சுமி விரதத்திற்காக கிருஷ்ணசாமியின் மனைவி பீரோவில் இருந்த நகைகளை எடுத்து பூஜை அறைக்கு கொண்டு சென்றார். அப்போது 30 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கிருஷ்ணசாமி வீட்டில் வேலை செய்து வந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லலிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விவேகானந்தனை பிடித்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது. வேலைக்கார பெண் லலிதாவை போலீசார் கைது செய்தனர்.






