என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார்.
- ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார்.
சாய்பாபா எப்போதும் தன் உடல் முழுவதையும் மூடும் வகையில் நீண்ட அங்கி போன்ற உடை அணிவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்.
முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார்.
ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார்.
ஆடைகள் உடுத்தும் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.
உடை கிழிந்து போனால், அதை பாபாப தூர எறிந்து விட மாட்டார்.
யாரிடமும் கொடுக்கவும் மாட்டார். துவாரகமாயில் எரியும் அக்னி குண்டத்தில் தன் உடையைப் போட்டு எரித்து சாம்பலாக்கி விடுவார்.
சில உடைகளை பாபா கந்தலாகும் வரை போடுவார்.
அந்த உடை கிழிந்தாலும் கூட அதை தைத்து போட்டுக் கொள்வார்.
சில உடைகளை அணிந்த சில தினங்களில் புதுசாக இருந்தாலும் கழற்றி தீயில் போட்டு எரித்து விடுவார்.
பாபாவின் உடைகள் கொஞ்சம் கிழிந்து இருப்பது தெரிந்தால் தத்யா பட்டீல் என்ற பக்தர், அந்த கிழிசலில் விரலை விட்டு இழுத்து மேலும் கிழித்து விட்டு விடுவார்.
அப்படியானால் தான் பாபா புதிய உடை உடுத்துவார் என்பதற்காக அவர் அப்படி செய்வார்.
- நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.
- அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.
நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.
அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.
பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.
நந்திதேவருக்கு கோபம் வந்தது.
ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.
இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.
பூனையை ஒரு வேடன் துரத்தினான்.
பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது. வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது.
பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது. சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.
ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க... இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்கள்.
பூ, பழங்களை படைத்து ஈசனை வணங்கினார்கள்.
இது நடந்தது ஒரு சிவராத்திரி தினத்திலாகும். எனவே சிவராத்திரி கதைகளில் இதுவும் இடம் பெற்றுள்ளது.
- திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
- இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.
சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
சுவாமி மலையில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன்.
தம் அடியாரின் உயிரைக் கவர வந்ததை அறிந்து சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் கையில் கோல் கொண்டு விரட்டினாராம்.
எமனை அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்குச் சொல்லப்பட்டதாம்.
- சிவபெருமான் பார்வதி தேவிக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.
- இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.
சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது.
இக்கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.
சிவபெருமான் பார்வதி தேவிக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.
இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.
- வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இம்மையில் நன்மை தருவார் கோவில்.
சுவாமி- சொக்கநாதர், அம்பாள் ஸ்ரீமீனாட்சியம்மை.
அதிகாலை சூரியோதயம் துவங்குகிற நேரம் முதல் மறுநாள் காலை சூரியோதயம் வரை சிவராத்திரி விரத காலம் அனுஷ்டிப்பார்கள்.
சிறப்பு அர்ச்சனையும் அபிஷேகங்களும் நடைபெறும்.
இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.
வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
- தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.
- சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
செங்கல்பட்டு அருகில் உள்ள தலம்.
இத்தலத்தை ருத்திரகோடி என்பார்கள்.
தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.
சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
நால்வர் பெருமக்களும் பாடிய இந்த அற்புதத் தலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் இங்கே ஈசனை வழிபட்டு மலைகளாக மாறி நிற்பதாக ஐதிகம்
கோடி ருத்தரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடமாததால் இந்தக் கோவிலை சிவராத்திரி நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
- அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.
- அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.
கும்பகோணம் அருகில் உள்ள தலம்.
ஒருமுறை உமையம்மை கயிலையை விட்டு நீங்க எங்கும் இருள்சூழ்ந்து உலகம் தவித்தது.
அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.
அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.
அவர்களின் பிரார்த்தனையை ஏற்று ஜோதி ஸ்வருபமாக வெளிப்பட்டாராம் ஈசன்.
அவரின் ஒளியால் உலகத்து உயிர்கள் இன்புற்றன.
இப்படி ருத்திரர்கள் அருள் பெற்றது சிவராத்திரி தினத்தில்தான்.
சிவராத்திரியில் இங்கு ஈசனை தரிசிப்போர் ருத்ரபதம் பெறுவார்கள்.
- சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.
- இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்ற இடத்துக்கு அருகில் உள்ள தலம் இது.
சென்னையிலிருந்தும் திருப்பதியில் இருந்தும் பஸ் வசதி உண்டு.
சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.
இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.
இத்தலத்தை திருப்பருப் பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் குறிப்பிடுவார்கள்.
இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
சிவராத்திரி நாளில் இங்குள்ள பாதாள கங்கை எனற தீர்த்தத்தில் நீராடி மல்லிகார்ஜுனரை வழிபடுவது புண்ணிய பலன்களைத் தரக் கூடியது.
சிவராத்திரியை ஒட்டி இங்கு பிரம்மான்டமான திருவிழா நடை பெறுகிறது. சிவராத்திரி அன்று தேர்த் திருவிழாவைக் காண பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரளாகக் கூடவர்.
- சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.
- சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.
எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர் புண்டு.
சிவராத்திரி வேளையில்தான் சிவ பெருமானை வழிபடும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் தண்டிக்கப்பட்டான்.
சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.
சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.
- சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.
- தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
திருப்பதிக்கு அருகே உள்ள காளத்தி மலையில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவது இக்கோவிலில் மட்டும் வழக்கத்தில் உள்ளது.
பிராந்திய பாரம்பரியத்தின் படி, சிவன் அவரை தடுத்து அவருக்கு மோட்சம் வழங்குவதற்கு முன், கண்ணப்பன் லிங்கத்திலிருந்து வழியும் இரத்தத்தை மறைக்க தனது இரு கண்களையும் வழங்க தயாராக இருந்த தலம் இது என்று கூறப்படுகிறது .
சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.
தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
- ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
- மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.
பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட அழல் மலையாய் நின்ற பெருமான் உலகம் உய்யும் பொருட்டு கல் மலையாகக் காட்சிக்கொடுத்த இடமே திருவண்ணாமலை.
அவரே அண்ணாமலையார்.
ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.
இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி நாளில் லிங்கோத் பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார் என்பார்.
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
- சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.
அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.
சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.
அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.
உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும் சகல நன்மைகளும் உண்டாகும்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும்.
அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.






