search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிகாரிகளுக்கு இந்தி தெரியாததால் தேசிய ஆணைய உறுப்பினர் ஆவேசம்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியை தேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் சயித் ஷாசேஷதி சந்தித்து புதுவையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். அருகில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளார்

    அதிகாரிகளுக்கு இந்தி தெரியாததால் தேசிய ஆணைய உறுப்பினர் ஆவேசம்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார்.
    • தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சயித் ஷாசேஷதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் அவர் இந்தியில் பேச தொடங்கினார். பல அரசு செயலர்களுக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசும்படி கோரினர். இதனால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் டென்ஷன் ஆனார்.

    இந்தி தேசிய அலுவலக மொழி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தி தெரியாது என்றால் எப்படி திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என கேள்வி எழுப்பினார். அவரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    Next Story
    ×