என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் முகநூல் மூலம் பழகியவரால் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை
    X

    புதுச்சேரியில் முகநூல் மூலம் பழகியவரால் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை

    • தனக்கு பிரசவவலி வந்த நிலையில் வீட்டிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
    • யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டைப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் எதிரே வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருபுவனை சீனிவாச நகரை சேர்ந்தவர் தேசிங்.

    இவரது வீட்டின் அருகில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததது. இதனை கேட்டு தேசிங் சத்தம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் திருபுவனை போலீசிக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு திருபுவனை சுகாதார மையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த குழந்தை திருபுவனையை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிறந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நட்பாக பழகிய ஒருவர், அந்த இளம்பெண்ணை திருமண செய்து கொள்வதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

    தனக்கு பிரசவவலி வந்த நிலையில் வீட்டிலேயே அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டைப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் எதிரே வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×