search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனில் பாம்பு தீவு மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை
    X

    கோப்பு படம்

    உக்ரைனில் பாம்பு தீவு மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை

    • கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது.
    • ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 5-வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. அந்த தீவை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியது.

    இந்த நிலையில் பாம்பு தீவு மீது இன்று ரஷியா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது. சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது பாஸ்பரஸ் ரக குண்டுகள் வீசப்பட்டன.

    இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறும்போது, "ரஷிய விமானப் படையின் சுகோய்-30 விமானங்கள், பாம்பு தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்தது.

    பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்ப கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் ஓடேசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    Next Story
    ×