என் மலர்
உலகம்

எகிப்தில் முக்கிய சாலைகளில் சைக்கிள் செல்ல தனிபாதை- சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
- வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க திட்டம்.
எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவைகளை மேம்படுத்தி பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
Next Story






