என் மலர்tooltip icon

    உலகம்

    வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைபிடித்த போப் பிரான்சிஸ்!
    X

    வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைபிடித்த போப் பிரான்சிஸ்!

    • மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார்.
    • ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் 1936-ம் ஆண்டு பிறந்தார். தனது பெற்றோரின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்த அவருக்கு ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்று பெயரிட்டனர். தனது சிறுவயதிலேயே இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை கற்றுக்கொண்டார்.

    சிறு வயதிலேயே சமூக உணர்வு உள்ளவராக இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்நாளில் எளிமையை கடைபிடிப்பவராக இருந்து வந்துள்ளார். மேலும் எளிமையை கடை பிடிக்குமாறு அனைவருக்கும் போதித்துள்ளார். பியூனஸ் அயர்சின் பேராயராக இருந்தபோது, அவர் அதகாரபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை.

    மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். பேராயருக்கான அதிகாரபூர்வ வாகனத்தையும் பயன்படுத்த வில்லை. சாதாரண மக்களுடன் பேருந்து மற்றும் ரெயில்களில் பயணம் செய்தார். ரோமிற்கு செல்ல வேண்டியிருந்தபோது விமானத்தில் எகானமி வகுப்பில் பயணித்து சென்றிருக்கிறார்.

    அவர் பேராயராக இருந்த போது தான், 2013-ம் ஆண்டு போப் பிரான்சிசாக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    இதனையறிந்த போப் பிரான்சிஸ், அவர்கள் அதிக செலவு செய்து ரோமிற்கு வருவதை ஊக்குவிக்கவில்லை. அவர்களை விமான டிக்கெட்டுகளுக்கு செலவழித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று கூறினார்.

    போப் பிரான்சிசாக மாறியபோதும் அவரிடமிருந்த எளிமை மாறவில்லை. மேலும் அனைவரிடமும் அன்பு காட்டுவதிலும் இறைவனுக்கு நிகராக திகழ்ந்து வந்தார் என்றால் மிகை ஆகாது.

    Next Story
    ×