என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் 3 இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி
    X

    பாகிஸ்தானில் 3 இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி

    • பலுசிஸ்தானில் ஏராளமானோர் கலந்துகொண்ட ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது.
    • அப்போது அங்கு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல், பலுசிஸ்தானில் மற்றொரு இடத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

    கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப்படை தலைமையகத்தைக் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ தலைமையகத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×