Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live News

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கிறார் முதலமைச்சர் விஜய்

* ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களின் சாதனைகளை பாராட்டியதுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகைகள் மற்றும் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும்.

* தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தடகளம், ஸ்குவாஷ் மற்றும் பிற போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - நாளை வாக்குப்பதிவு

* 2 தொகுதிகளிலும் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

* தேர்தலையொட்டி இந்த 2 தொகுதிகளுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்

* கடந்த 26-ந்தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

* 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com