சென்னையில் 11-ந்தேதி பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: சைதாப்பேட்டை முதல் ஐ.ஐ.டி. வரை மக்களை சந்திக்கிறார்

சென்னையில் ஒரு மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்களை திரட்டி வர முடிவு செய்து உள்ளார்கள். அதுதவிர நந்தம்பாக்கம், ஐ.ஐ.டி. ஆகிய இடங்களிலும் பெருமளவில் திரண்டு வரவேற்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on: 
Summary

சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகை வழியாக ஐ.ஐ.டி. வரையிலான சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரமும் ரோட்டின் இருபக்கமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வரவேற்கவும் இந்த வழியில் பிரதமர் மோடி ‘ரோடுஷோ’ செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி., நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

3 இடங்களில் வரவேற்பு

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் பா.ஜ.க. பலத்தை காட்டவும் கட்சியினர் திட்டமிட்டுள்ளார்கள்.

போரூரில் நடைபெறும் மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. எனவே கூட்டம் அதிக அளவில் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பா.ஜ.க.வினர் தனித்துவமாக தெரியும் வகையில் அனைவரும் கட்சி கொடிகளுடன் பிரதமரை வரவேற்க திரண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்களை திரட்டி வர முடிவு செய்து உள்ளார்கள்.

அதுதவிர நந்தம்பாக்கம், ஐ.ஐ.டி. ஆகிய இடங்களிலும் பெருமளவில் திரண்டு வரவேற்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு இடத்திலும் தலா 3 மாவட்டங்கள் வீதம் வரவேற்பு ஏற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.

ரோடு ஷோ

போரூர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி காரில் அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.க்கு வருகிறார். வரும் வழியில் வழிநெடுக வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகை வழியாக ஐ.ஐ.டி. வரையிலான சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரமும் ரோட்டின் இருபக்கமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வரவேற்கவும் இந்த வழியில் பிரதமர் மோடி ‘ரோடுஷோ’ செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். அந்த இடத்தையும் பார்வையிட்டு பொதுமக்கள் எவ்வளவு பேரை திரட்டி வருவது என்று விவாதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com