கேரளத்தில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
மழை
Published on: 
Summary

கேரளாவில் தொடரும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் இரவு பயணங்களை தவிர்க்குமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பலத்த இடி-மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவக் கூடும் என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

அதன்படி பத்தனம் திட்டா, இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்றும், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை (6-ந் தேதி)யும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறு அரசு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com