கோட்டை ரெயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரெயில்

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பியவர்களால் மின்சார ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பியது. இதனால் ரெயில்களில் தொங்கியபடி பயணித்தனர்.
கோட்டை ரெயில் நிலையம்
கோட்டை ரெயில் நிலையம்
Published on: 
Summary

சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தடம்புரண்டதால், தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மின்சார ரெயில்

சென்னையில் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து மின்சார ரெயில். இந்த மின்சார ரெயிலானது செங்கல்பட்டு-தாம்பரம்-சென்னை கடற்கரை வழியாகவும், சென்னை கடற்கரை- பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வழித்தட மின்சார ரெயில் சேவைகளை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், வார தொடக்க நாள் மற்றும் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பியவர்களால் மின்சார ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பியது. இதனால் ரெயில்களில் தொங்கியபடி பயணித்தனர்.

தடம் புரண்டதால் மின்சார ரெயில்

இதற்கிடையே, சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலானது கோட்டை ரெயில் நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தடம்புரண்ட ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தாம்பரம்- கடற்கரை வழித்தடத்தில் ரெயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com