

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக தலைமைச் செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அறிவித்தது. 1,200 கோடி ரூபாய் செலவில் 25.55 ஏக்கர் பரப்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக செப்டம்பர் 8-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மனுதாரர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மனுவை திரும்ப பெற்றதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேலும், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதை எதிர்த்து 2011-ல் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதிய தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை ஐகோர்ட் 2011-ல் முன்னதாக தள்ளுபடி செய்துள்ளது.
விளம்பரத்துக்காக பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை தடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.