

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படுகின்றன.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த 17-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 26-ந்தேதி முதல் நேற்று வரை 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 9 நாள்கள் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ந்தேதியான இன்று திறக்கப்பட்டது.
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படுகின்றன.
1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
நாளை மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், இரு தொகுதிகளுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும், தனியார் பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள் வரும் 7-ந்தேதியில் திறக்கப்படுகிறது.