

தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். மேலும் அப்போதுதான் தங்களது தொகுதி மேம்பாடு அடையும் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். மேலும் அப்போதுதான் தங்களது தொகுதி மேம்பாடு அடையும் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
இதுவரை நடந்த இடைத்தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பு அதிகம் ஆளுங்கட்சியினருக்கே இருந்துள்ளது.
சட்டசபையில் வினாக்களுக்கு விடை அளிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு விடையளிப்பதற்காக பேரவைத் தலைவர் என்கிற முறையில் அந்தந்த துறைகளுக்கு கேள்விகளை அனுப்பி வைத்து பதில் பெறுவது வழக்கம். அதை அவையிலும் அளிக்கலாம். அடுத்த கட்டமாக கொஞ்சம் காலதாமதமானால் அந்த விடைகளை கேள்வி கேட்ட உறுப்பினர்களுக்கு பதிலாக அனுப்பி வைப்பது வழக்கம். இந்த முறை புதிதாக ‘பதிவு செய்ய வேண்டும்’ என்பதற்காக நிறைய உறுப்பினர்களை பேச வைக்க விரும்பினேன். பல தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு அந்த வாய்ப்பு இதற்கு முன் மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே நிறைய பேருக்கு வாய்ப்பளிக்கும் போது புதிதாக பேசுகிறவர்கள் தங்கள் தொகுதிகளைப் பற்றிய கேள்விகளை யாரும் எதிர்பாராத நிலையில் எழுப்புவர். அந்த நிலையில் அமைச்சர்களுக்கு, அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அவையிலிருந்தே தொடர்பு கொண்டு உடனடியாக பதில் பெறுவதில் சில சிரமங்கள் இருந்தது. ஆனாலும் பல அமைச்சர்கள், அந்தந்த கேள்விகளுக்கு உடனடியாக அவை நேரம் முடிவதற்கு முன்பாகவே பதிலை பெற்று கூறி உள்ளனர். மீதி உள்ளவை ‘பதிவு’ எனும் முறையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வரலாற்றில் புதிய அணுகுமுறையை உருவாக்கியதில் சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் பெற முடியவில்லை.
விடுபட்ட கேள்விக்குரிய பதிலை அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள், அனுப்பும் நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது. எனவே மற்றவர்கள் குறிப்பிடுவது போல 15 சதவீதம், 20 சதவீதம் என்பதெல்லாம் இல்லை. அனைத்து உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நிலையில்தான் அரசு இருக்கிறது. மிகச் சிறந்த ஜனநாயக முறையில் தான் இந்த முதல் கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. யாருக்கும் எந்த குறையும் இல்லை. என் மீது குறைகள் இருந்து அதை குறிப்பிட்டு சொன்னால் அதை திருத்திக் கொள்வதற்கு வசதியாக மிசா வழக்கு பற்றி முதல்வர் நிறைய பேசினார். அது பற்றிய குறிப்புகள் ஏற்கனவே இந்த அவையில் கூறப்பட்டிருந்தது. மிசா குறித்து கூறப்பட்டிருந்தால், பேசப்பட்டிருந்தால், குறிப்புகள் இருந்தால் அவையெல்லாம் எடுத்து எனக்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் பேசி முடிந்தவுடனே நான் சொல்லி அனுப்பினேன்.
அந்த குறிப்புச் சீட்டுதான் கையில் வந்தது. இந்தந்த ஆண்டுகளில் இதே அவையில், இதே மிசாவைப் பற்றி யார் எப்படி கைது செய்யப்பட்டார்கள், எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற விவாதங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. அது எவ்வளவு மணி நேரம் நடந்திருக்கிறது என்ற குறிப்பு எனக்கு வந்தது.
அந்தக் குறிப்புதான் கையிலே வந்ததே தவிர, யாரும் அவையில் யார் பேச வேண்டும், பேசக்கூடாது என்பதற்கான உத்தரவை யாரும் எனக்கு பிறப்பிக்கவில்லை. பிறப்பிக்கவும் மாட்டார்கள்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்க வழக்கு மேல்முறையீட்டில் அடுத்த கட்டமாக நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்கும் நிலையில் தான் இந்த அவை இருக்கிறது. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டுதான், என் அதிகார வரம்பிற்கு உட்பட்டுதான் எல்லா முடிவும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.