என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி
    X

    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி

    • நடந்து முடிந்துள்ள தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்தார்.
    • மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விழுப்புரம் பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி தங்கி இருந்து படித்து வந்தார். பி.டெக் முதலாம் ஆண்டு மாணவியான இவர் விடுதி அறையில் தங்கி உள்ளார்.

    நடந்து முடிந்துள்ள தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தனது அறையில் வைத்து அளவிற்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×