என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    களக்காடு அருகே விஷ வண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு
    X

    களக்காடு அருகே விஷ வண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

    • தென்னை மரங்களில் இருந்த கடந்தை வண்டுகள் இருவரையும் கொட்டியுள்ளது.
    • இருவரும் களக்காட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 7). இவர் அங்குள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை, ஜீவானந்தம் தனது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த பட்டாணிதுரை என்பவரின் மகன் நிதின்ராஜ் (5) என்பவருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அருகில் இருந்த தென்னை மரங்களில் இருந்த கடந்தை வண்டுகள் இருவரையும் கொட்டியுள்ளது.

    இதனால் 2 பேரும் அலறி துடித்தனர். இதைப்பார்த்து ஓடிவந்த அவர்களது பெற்றோர் உடனடியாக, ஜீவானந்தத்தை களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நிதின்ராஜ் களக்காட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை ஜீவானந்தத்திற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே டாக்டர்கள் ஓடிவந்து பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×