என் மலர்

  தமிழ்நாடு

  பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுமா?
  X

  சமையல் எரிவாயு

  பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவொற்றியூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர்.
  • சமையல் கியாஸ் உபயோகிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வினியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும்.

  சென்னை:

  சென்னையை அடுத்த மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தின் மூலம் குருடாயிலை சுத்திகரித்து அதில் இருந்து பல்வேறு எண்ணெய் பொருட்கள் பிரித்து தயாரித்து வினியோகிக்கப்படுகின்றன.

  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குருடாயிலை பல்வேறு வகையில் தரம் பிரித்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றது.

  சமீபத்தில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  திருவொற்றியூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர்.

  அதனை தொடர்ந்து வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் சி.பி.சி.எல். ஆலையை ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆலையின் உற்பத்தி இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உற்பத்தி அவை குறைக்க அறிவுறுத்தியுள்ளது.

  100 சதவீத உற்பத்தியை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால் பெட்ரோல், சமையல் கியாஸ் டீலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  தொழிற்சாலை உற்பத்தியை குறைத்தாலும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாமல் தங்கு தடையின்றி எரிபொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையால் உற்பத்தி குறைக்கப்படும்போது வினியோகஸ்தர்களுக்கு சப்ளை தட்டுப்பாடு வராமல் நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்தார்.

  அவர் மேலும் கூறுகையில், பெட்ரோல், டீசல் உற்பத்தியை 25 சதவீதம் குறைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சப்ளை செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு வினியோகத்தை சீராக கண்காணிக்க வேண்டும் என்றார்.

  அதே போல் சமையல் கியாஸ் உபயோகிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வினியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும்.

  மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதோடு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று கியாஸ் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

  Next Story
  ×