search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.1 கோடி வட்டி பெரியபாளையம் கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்
    X

    ரூ.1 கோடி வட்டி பெரியபாளையம் கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது.
    • ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி கோவில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    சென்னை:

    இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரியபாளையம், பவானியம்மன் கோவிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக் கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை இத்திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 இலட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும்.

    இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி கோவில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமிராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×