என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
    X

    கோப்பு படம்

    பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

    • சிற்றுண்டிக்கான உணவு மூலப் பொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    • சிறுதானியங்கள் கொள்முதல் செய்தவற்கான எளிய வழிமுறைகளை கண்டறிதல்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தினை திறன்பட செயல்படுத்திட ஏதுவாக ஐ.ஏ.எஸ்.யான இளம்பகவத்தை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பு அதிகாரியின் பணிகள், பொறுப்புகள் என்ன என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    காலை உணவு திட்டத்தினை திறன்பட செயல் படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து செயல்படுதல், சிற்றுண்டிக்கான உணவு மூலப் பொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    உள்ளூரில் கிடைக்க கூடிய, விளையக்கூடிய காய்கறிகள், சிறுதானியங்கள் கொள்முதல் செய்தவற்கான எளிய வழிமுறைகளை கண்டறிதல்.

    சமையல் கூடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் எடுத்து சென்று பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×