என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளுக்கு வழங்கப்படும் உணவுகள்
- ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே
- மதுரை மாவட்டத்தில் போட்டிக்கு இன்னும் 32 நாட்களே உள்ளன:
ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அதற்கு வழக்கத்தை விட கூடுதலாக சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. அதாவது தினமும் காலையில் பச்சைப்புல், ஒரு கிலோ பருத்தி விதை. மதிய நேரத்தில் உளுந்தம் பருப்பு மாவு. இரவு நேரத்தில் உலர் வைக்கோல் உடன் 100 கிராம் பேரிச்சம்பழம், ஒரு கிலோ பருத்தி விதை இப்படியாக ஜல்லிக்கட்டு காளைகளின் உணவு மெனு ஆச்சரியப் படுத்துகிறது.
இது தவிர பல தானியப் பருப்பு, பச்சரிசி, தேங்காய் ஆகியவையும் சிறப்பு உணவாக தரப்படும். ஒரு சிலா் தினமும் 2 முட்டைகள் கூட வழங்குவா். காளைகள் திடகாத்திரமாகவும், மாடுபிடி வீரா்களை தாங்கும் சக்தியுடன் கம்பீரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கண்ட உணவுகள் தரப்படுகின்றன. இதுதவிர 10 நாட்களுக்கு ஒருமுறை நாட்டுக்கோழியில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அம்மியில் இடித்து எலும்புகள் அகற்றி மஞ்சளில் பிசைந்து உருண்டை உணவாக வழங்குகின்றனர். இதனால் காளைக்கு வீரிய திறன், எலும்பு பலம் அதிகரிக்கும். மதுரை மாவட்டத்தில் போட்டிக்கு இன்னும் 32 நாட்களே உள்ளன: