என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
    X

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

    • நாம் தமிழர் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், உண்மையான சமூக நீதியை நிலை நாட்டுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்தினார். 'ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், இசை மதிவாணன், அன்வர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளரும் மண்டல செயலாளருமான ஈ.ரா.மகேந்திரன், மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இளவஞ்சி, பிரகலாதா, சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திர சேகர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் நாகநாதன், தலைமை நிலைய செயலாளர் செந்தில் பாக்கியராசன் மற்றும் திரைப்பட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம், முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×