search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
    X

    மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.பந்தக்கால் நட்ட காட்சி.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

    • ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயலர் மதனா, ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் கிராம மக்கள், கோவில் பணியாளர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×