என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை சாலையோரங்களில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு குவிந்தன
- திருக்கார்த்திகை தீப விழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கார்த்திகை தீப விழாவையொட்டி அகல் விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.
சென்னை:
கார்த்திகை தீபத்தையொட்டி சென்னையில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை தீப விழா வருகிற 6-ந்தேதி (டிசம்பர்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் வீடுகள் முழுவதும் அகல்விளக்கு தீபம் ஏற்றுவார்கள்.
இதையொட்டி சென்னையில் அகல்விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளது. சென்னையில் ராயப்பேட்டை, கொசப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் சாலையோர கடைகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பல வித வண்ணங்களில் விதவிதமான வகையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னையில் கொசப்பேட்டை புரசைவாக்கம், வடபழனி, பெரம்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அகல் விளக்குகள் பலவித வண்ணங்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கார்த்திகை தீப விழாவை யொட்டி அகல் விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். பல்வேறு வண்ண வடிவிலான அகல்விளக்குகள் பொதுமக்களை பெரிதும் கவருகின்றன.
இந்த ஆண்டு கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனை சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.






