search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா கடத்தல் கும்பல் கைது
    X

    திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா கடத்தல் கும்பல் கைது

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
    • ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    திருப்பூர்:

    ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ஈஸ்வரன், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 9 கிலோ கஞ்சாவும், 2 பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த முத்தணம் பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கடத்தலில் தொடர்பு டைய கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, செட்டி பாளையத்தை சேர்ந்த தீனதயாளன், பால கிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூர் மாநகரில் சப்ளை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது . கடத்தல் கும்பலிடம் இருந்து 9 கிலோ கஞ்சா, 2 பட்டா கத்தி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலை மறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×