என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆற்காடு ஜவுளிக்கடையில் பற்றி எரிந்த தீ.
ஆற்காடு ஜவுளிக்கடையில் தீவிபத்து- விடிய விடிய பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
ஆற்காடு அருகே பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விடிய, விடிய பற்றி எரிந்த தீயால் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், அண்ணா சாலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தளங்களை கொண்ட இந்த ஜவுளிக்கடையில் தரை தளத்தில் வீட்டு உபயோக பொருட்களும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் ஜவுளி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஜவுளிக்கடையை வழக்கம்போல பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இதற்கிடையே நள்ளிரவு 10 மணி அளவில் அந்த ஜவுளிக்கடைக்குள் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்தார். அப்போது கடைக்குள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் ஜவுளிக்கடையின் முன்புற ஷட்டர் மற்றும் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீ மளமளவென தரை தளத்தில் இருந்து முதல் மற்றும் 2-ம் தளங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் உள்ளே இருந்த ஜவுளி துணிகள் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
கடையின் பக்கவாட்டு சுவரை தீயணைப்பு படைவீரர்கள் உடைத்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். அப்போது 3 தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் திடீரென்று தீர்ந்து போனது. இதனால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் அருகில் உள்ள ஆற்காடு பாலாற்றில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்தும் தண்ணீர் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வாகனங்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.
ஜவுளிக்கடையில் 10 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி, விடியற்காலை 4 மணி வரை நீடித்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஜவுளிக்கடையில் பற்றி எரிந்த தீயால் கரும்புகை வானுயர எழுந்தது. மேலும் கடையில் விடிய, விடிய பற்றி எரிந்த தீயால் ஆற்காட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த தீ விபத்தில் ஜவுளிக்கடையில் இருந்த பட்டுச் சேலைகள், ரெடிமேடு துணிகள், பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் தீவிபத்தால் கடையின் கட்டிட சுவர்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story