search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காசிமேட்டில் 150 படகுகள் சேதம்
    X

    காசிமேட்டில் 150 படகுகள் சேதம்

    • புயல் கரையை கடக்கும் இரவு நேரம் செல்ல செல்ல பயங்கர சத்தத்துடன் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தடுக்க முடியவில்லை
    • தமிழக அரசு முறையாக கணக்கீடு எடுத்து மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ராயபுரம்:

    சென்னை காசிமேடு கடற்கரையில் விசைப்படகுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

    கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 150-க்கும் மேற்பட்ட படகுகள் புயலின் வேகத்தால் பயங்கர சத்தத்துடன் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சேதமடைந்துள்ளன.

    மேலும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நீரின் உள்ளே மூழ்கியுள்ளன. முன் கூட்டியே மீனவர்கள் எச்சரிக்கையோடு இருந்தாலும் கூட பெரிய வகை விசைப்படகை கரைக்கு ஏற்றுவது கடினமாக இருந்ததால் கடலின் கரையிலேயே நிறுத்தினர். புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் படகுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.

    மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னர்தான் படகுகளின் சேதம் குறித்த முழு விபரங்கள் தெரியவரும்.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறும்போது, "நேற்று காலை முதலே கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. இதனை அடுத்து நாங்கள் எங்களது விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதற்காக மதியத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயிறு கட்டி பாதிப்பு ஏற்படாதவாறு நிறுத்தி வைத்தோம்.

    ஆனால் புயல் கரையை கடக்கும் இரவு நேரம் செல்ல செல்ல பயங்கர சத்தத்துடன் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதை எங்களால் தடுக்க முடியவில்லை தற்பொழுது நீரில் உள்ள ஒரு விசைப்படகின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் ஆகும்.

    சேதமடைந்த விசைப்படகுகளை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் மீனவர்கள் ஆகிய எங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு முறையாக கணக்கீடு எடுத்து எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×