என் மலர்
விளையாட்டு

உலக கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி
- 20-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது.
- அரேபியா தரப்பில் முகமது அலி அப்துர் ரகுமான் 24 புள்ளிகளும், இந்தியா சார்பில் குர்பாஸ் சிங் சந்து 19 புள்ளிகளும் எடுத்தனர்.
சென்னை:
20-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதில் ஆசிய-ஓசியானா மண்டலத்திற்கான தகுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி (டி பிரிவு) சவுதிஅரேபியாவை எதிர்கொண்டது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா 81-57 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
அரேபியா தரப்பில் முகமது அலி அப்துர் ரகுமான் 24 புள்ளிகளும், இந்தியா சார்பில் குர்பாஸ் சிங் சந்து 19 புள்ளிகளும் எடுத்தனர். ஏற்கனவே அவர்களது இடத்தில் நடந்த ஆட்டத்திலும் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்து பிப்ரவரி 27-ந்தேதி கத்தாரை சந்திக்கிறது.
Next Story






