என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மீண்டும் சம்பவம் செய்த இந்தியா: கபடியிலும் பாகிஸ்தானுக்கு கைகுலுக்க மறுப்பு- வைரல் வீடியோ
    X

    மீண்டும் சம்பவம் செய்த இந்தியா: கபடியிலும் பாகிஸ்தானுக்கு கைகுலுக்க மறுப்பு- வைரல் வீடியோ

    • இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்தனர்
    • அதேபோல மகளிர் இந்திய அணி வீராங்கனைகளும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

    அதனை தொடர்ந்து ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்நிலையில் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கபடி விளையாட்டு முதல் தடவையாக சேர்க்கப்பட்டுள்ளது.

    இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் எளிதாக இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன், கை நீட்டினார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கொஞ்சம் கூட கவனிக்காமல் இருந்தார். இதனை சற்று எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர், ஷாக் ஆனது போல் நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×