என் மலர்
விளையாட்டு

'மேக்-அப்' மூலம் டோனி போல மாறிய இளம்பெண்
- கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
- டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன.
கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவர் விளையாடும் போது ரசிகைகள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 'மேக்-அப்' கலைஞரான தீக்ஷிதா ஜிந்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளிக்கிறார்கள்.
Next Story






