என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய ரக்பி: ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
    X

    ஆசிய ரக்பி: ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

    • பி பிரிவில் ஆப்கானிஸ்தான், லெபனான் அணிகளை வீழ்த்தியிருந்தது.
    • காலிறுதியில் ஜோர்டான் அல்லது சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது.

    13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ரக்ஃபி எமிரேட்ஸ் ஆண்கள் செவன்ஸ் டிராபி 2025 தொடர் ஓமனில் இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்திய அணி "டி" பிரிவில் இடம் பிடித்திருந்தது. "டி" பிரிவில் ஆப்கானிஸ்தானை 26-5 எனவும், லெபனானை 14-10 எனவும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் "ஏ" பிரிவில் 2ஆம் இடத்தை பிடித்த ஈரானுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் இந்தியா 21-7 என ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஜோர்டான்- சவுதி அரேபியா இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், அரையிறுதியில் இந்தியா மோதும்.

    Next Story
    ×