புதுச்சேரி கடற்கரையில் சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு- போலீசார் விசாரணை

கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 சிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.போலீசார் 2 சிலைகளையும் கைப்பற்றி, பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு- போலீசார் விசாரணை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி-கடலூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த மணப்பட்டு மூ.புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.

இங்குள்ள பல்மைரா கடற்கரை பகுதியில், நேற்று மாலை ஒரு நந்தி கற்சிலையும் அதற்கடுத்து 50 மீட்டர் தொலைவில் மணல் பரப்பில் மற்றொரு சாமி கற்சிலையும் கிடந்தது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.

உடனே கிராம மக்கள் அப்பகுதிக்கு திரண்டனர். திடீரென சாமி சிலைகள் கடற்கரையில் கிடந்ததால் கிராம மக்கள் பக்தி பரவசமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 சிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் சிலைகள் இருந்த இடத்தின் அருகே 2 சாக்கு பைகள் மற்றும் 4 சக்கர வாகனம் வந்து சென்றதற்கான டயரின் தடம் மணல் பரப்பில் இருந்தது. அந்த 2 சிலைகளையும், யாரோ கொண்டு வந்து வீசி சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் 2 சிலைகளையும் கைப்பற்றி, பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிலைகளை வீசி சென்றவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்து வீசி சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com