search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொன்முடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்- பொதுமக்கள் பீதி
    X

    பொன்முடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்- பொதுமக்கள் பீதி

    • வயநாடு பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
    • வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரை புலி தாக்கி கொன்றது. அந்த புலி 10 நாட்களுக்கு பிறகு சிக்கியது. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு அங்கு மேலும் ஒரு புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் திருவனந்தபுரம் நகரின் முக்கிய சுற்றுலாமையமான பொன்முடியில் சிறுத்தை புகுந்துள்ளது. அங்குள்ள போலீஸ் நிலையம் அருகிலேயே நடமாட்டம் இருந்துள்ளது. அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர்.

    ஆனால் அப்போது சிறுத்தைப்புலி தென்படவில்லை. வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டிருக்கிறது. அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×