search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் மாநிலத்தில்  அலுவலக காருக்கு பேன்சி எண் வாங்கிய முதல்-மந்திரி
    X

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அலுவலக காருக்கு பேன்சி எண் வாங்கிய முதல்-மந்திரி

    • சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஸ் பாகல், தனது காருக்கு 23 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார்.
    • 2018-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அவர் முதல்-மந்திரி பொறுப்புக்கு வந்த பின்பும் அவரது அலுவலக காரின் எண் 23 ஆகவே இருந்தது.

    ராய்ப்பூர்:

    சொந்தமாக கார் வைத்திருப்பர்கள், காருக்கான பதிவு எண், தங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அமைய வேண்டும் என்று விரும்புவார்கள்.

    குறிப்பாக நியுமராலஜி படியும், அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்களை தங்கள் வாகனங்களின் பதிவு எண்ணாக வைக்கவும் பல லட்சம் பணத்தை கொடுக்க தயாராக இருப்பார்கள்.

    இதனை சிலர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாலும், அரசியல்வாதிகள் இதனை பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அவர்களில் பலரும் தங்கள் வாகனத்திற்கு பேன்சி எண்களை வைத்திருப்பார்கள்.

    அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஸ் பாகல், தனது காருக்கு 23 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார். இவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் அவரது காரின் எண் 23 என்றே இருந்தது. 2018-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அவர் முதல்-மந்திரி பொறுப்புக்கு வந்த பின்பும் அவரது அலுவலக காரின் எண் 23 ஆகவே இருந்தது.

    இதற்கு காரணம் அவரது அதிர்ஷ்ட எண் 23 என்று கூறப்படுகிறது. இப்போது முதல்-மந்திரி ஆனபின்பும் அவர் பயன்படுத்தும் கார்களில் 23 என்ற எண்ணே இடம் பெற்றுள்ளது.

    இதுபோல சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான ராமன் சிங் பயன்படுத்திய வாகனங்களில் 004 என்ற எண்ணே இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×