search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் ரூ.பல கோடி போதை பொருள் தயாரிப்பு
    X

    தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் ரூ.பல கோடி போதை பொருள் தயாரிப்பு

    • கலால் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் ரசாயன தொழிற்சாலைக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பொல்லாரம் என்ற இடத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதாக தெலுங்கானா மதுவிலக்கு மற்றும் காலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கலால் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் ரசாயன தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் ஆச்சரிய குறியீடுகளுடன் பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் தயாரிக்க கூடிய மெத்தில் மெத்கா தினோன், சைக்கோட்ரோ பிக் உள்ளிட்ட மூலப் பொருட்கள் இருந்தன. அங்கிருந்த ரூ. 9 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் இந்த ரசாயன தொழிற்சாலையில் ரூ.பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை தயாரித்துள்ளனர்.

    இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் இங்கிருந்து போதை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×