என் மலர்tooltip icon

    இந்தியா

    மலையாள சினிமாவில் 99 வயதில் நடித்த மூதாட்டி- நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
    X

    மலையாள சினிமாவில் 99 வயதில் நடித்த மூதாட்டி- நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?

    • நடிப்பு அனுபவம் பற்றி மூதாட்டியிடம் கேட்டால், நான் சொன்னபடி செய்தேன் என்று பணிவுடன் தெரிவித்தார்.
    • மூதாட்டியின் நடிப்பை திரையில் காண அவரது குடும்பத்தினர் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியை சேர்ந்த மூதாட்டி நாராயணியம்மா. இவர் தற்போது தனது 99-வயது வயதில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பாப்பன் நரிப்பட்டா என்ற இயக்குனர் எடுத்துள்ள வயசேத்ரயாயி என்ற மலையாள படத்தில் நாராயணியம்மா முதன் முறையாக நடித்திருக்கிறார். நகைச்சுவை திரைப்படமான இந்த படம், திருமணத்திற்காக இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் கூறுகிறது.

    பிரசாந்த் முரளி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், மூதாட்டி நாராயணியம்மா பால் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் 28-ந்தேதி தியேட்டர்களில் வெளிவருகிறது.

    மூதாட்டிய நாராயணியம்மா தனது 99-வது வயதில் திரையுலகிற்கு வந்திருப்பது முற்றிலும் தற்செயலாக நடந்துள்ளது. அவரது பேரன் யூசி விஜூ மூதாட்டி நடித்திருக்கும் படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.

    முதலில் திரைப்படத்தில் நடித்த அனுபவம் இல்லாததால் நடிக்க மூதாட்டி நாராயணியம்மா தயங்கினார். இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும், எளிதாக நடித்துவிடலாம் என்று கூறி, அவரது பேரன் தொடர்ந்து வற்புறுத்தியதால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

    மூதாட்டிய நாராயணியம்மா கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடும் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு 12 வயதில் திருமணம் நடந்துள்ளது. 20-வது வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த அவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். தற்போது தனது இளைய மகன் மற்றும் குடும்பத்தினருடன் வடகராவில் வசித்து வருகிறார்.

    இளம் வயதிலேயே திருமணமாகி விட்டதால், அவரால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. பள்ளிக்கு செல்ல அவர் விரும்பியபோதிலும் அது நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப தொழிலான நெசவு தொழிலில் மூதாட்டி நாராயணியம்மா ஈடுபட்டார்.

    நடிப்பு அனுபவம் பற்றி மூதாட்டியிடம் கேட்டால், நான் சொன்னபடி செய்தேன் என்று பணிவுடன் தெரிவித்தார். மூதாட்டி நடிப்பு பற்றி இயக்குனர் கூறும்போது, மூதாட்டி நாராயணியம்மா முதன்முறையாக நடிக்கும் நடிகையாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரே படப்பிடிப்பில் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் என்றார்.

    99 வயதில் தனது பேரனால் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மூதாட்டி நாராயணியம்மா பிரம்மிப்பில் ஆழ்ந்துள்ளார். மூதாட்டியின் நடிப்பை திரையில் காண அவரது குடும்பத்தினர் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

    மூதாட்டி நாராயணியம்மா சினிமாவில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×