என் மலர்

  இந்தியா

  சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
  X

  சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.

  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  சிக்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்மே கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.

  சண்டை ஓய்ந்த பிறகு அங்கு கிடந்த 2 மாவோயிஸ்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Next Story
  ×