search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவன் வயிற்றில் காந்தம், பலூன், பழ விதைகள்- ஆபரேசன் மூலம் அகற்றம்
    X

    சிறுவன் வயிற்றில் காந்தம், பலூன், பழ விதைகள்- ஆபரேசன் மூலம் அகற்றம்

    • சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது.
    • குழந்தைகள் இதுபோன்ற பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன். இவன் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் காந்தம், பிளாஸ்டிக், ரப்பர் பலூன் மற்றும் பழ விதைகளை விழுங்கினான்.

    சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரகாசம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது சிறுவன் வயிற்றில் 4 காந்தங்கள் இருப்பதை காட்டியது.

    தொடர்ந்து ஆபரேசன் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் சிறுவனுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது அவனது வயிற்றிலிருந்து 4 காந்தங்கள் ஒரு பிளாஸ்டிக், ஒரு நீண்ட ரப்பர் பலூன், கருப்பு நிற பிளம் விதைகள் அகற்றப்பட்டன. ஆபரேசனுக்கு பிறகு சிறுவன் நலமாக உள்ளார்.

    காந்தங்கள், பொத்தான், பேட்டரிகள், நாணயங்கள், மோதிரங்கள் மற்றும் பாதுகாப்பு ஊசிகள் போன்ற பொருட்களை குழந்தைகள் தற்செயலாக உட்கொள்ளலாம்.

    குழந்தைகள் இதுபோன்ற பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×