என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரபல சீரியல் நடிகை பாலியல் பலாத்காரம்- 2 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு
    X

    பிரபல சீரியல் நடிகை பாலியல் பலாத்காரம்- 2 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

    • நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.
    • நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தகவல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. இது மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.

    இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழு விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிந்தது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மலையாள திரையுலக பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மலையாள சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். படப்பிடிப்பின் போது சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருக்கிறார்.

    அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அது குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு இன்போ பார்க் போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிந்தனர்.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×