search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கிராமத்தில் அட்டகாசம் செய்த 300 குரங்குகள் பிடிக்கப்பட்டது
    X

    பிடிக்கப்பட்ட 300 குரங்குகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஆந்திராவில் கிராமத்தில் அட்டகாசம் செய்த 300 குரங்குகள் பிடிக்கப்பட்டது

    • குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
    • தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரட்ல கோடா கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு வந்த குரங்குகள் அங்குள்ள வீடுகளில் புகுந்து தொல்லை கொடுத்து வந்தது. தோட்டங்களில் புகுந்து பழம், காய்கறிகளை கடித்து நாசம் செய்து வந்தன. மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவரையும் கடித்து குதறியது.

    கடந்த சில ஆண்டுகளாக குரங்குகளின் தொல்லை எல்லை மீறி போகவே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரங்குகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென எண்ணினர்.

    குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரங்குகளை பிடிப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர். அவர்கள் அரட்ல கோடா கிராமத்திற்கு வந்து குரங்களை பிடித்தனர். பிடிக்கப்பட்ட 300 குரங்குகளை கூண்டில் அடைத்தனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் 12 மைல் தூரத்தில் உள்ள படேறு அடர்ந்த வனப்பகுதியில் குரங்குகளை விட்டனர். குரங்குகளின் அட்டகாசம் தீர்ந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    Next Story
    ×