என் மலர்
இந்தியா

10 வயது சிறுமி பலாத்காரம்- தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது
- சிறுமி அடிக்கடி தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
- கடந்த வாரம் சிறுமியின் விடுதிக்கு சென்ற சிண்டு வீட்டிற்கு வரவேண்டும் என சிறுமியை அழைத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூருவை சேர்ந்த 10 வயது சிறுமி. இவர் ஏலூரு அருகே உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுதியின் அருகே உறவினர் வீடு உள்ளது. சிறுமி அடிக்கடி தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
விடுதிக்கு வந்த சிறுமியின் உறவினர் மகன் சிண்டு தின்பண்டங்கள் மற்றும் துணிமணிகள் வாங்கி தர வேண்டும் என வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.
அதன்பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பரான 13 வயது சிறுவனுக்கும் சிறுமியை விருந்தாக்கினார்.
இந்த தகவல் சிண்டுவின் தந்தை ராம்பாபுவுக்கு தெரிய வந்தது. சிறுமி தனக்கு மகள் முறை என எண்ணாமல் அவரும் சிறுமியை பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமியின் விடுதிக்கு சென்ற சிண்டு வீட்டிற்கு வரவேண்டும் என சிறுமியை அழைத்தார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட விடுதி வார்டன் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விடுதி வார்டனிடம் தெரிவித்தார். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் சிறுமியின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் ஏலூரு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிண்டு அவரது தந்தை ராம்பாபு ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






