என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டையில் யூனியன் கூட்டம் நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியனின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.    ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேறார். துணைத் தலைவர் ராஜாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார்.

    தலைவர் பேசுகையில், மத்திய-மாநில அரசுகளின் நிதிகள் மூலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது. தற்போது 15வது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 92.66 லட்சத்தில் புதிய பணிகள் நடைபெற்ற உள்ளன என்றார்.

    கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களின் வரவு-செலவு கணக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர் ரவி பேசுகையில், புதிய ஒப்பந்ததாரர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் கவுன்சிலர்களை பார்க்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர் அடுத்த கூட்டத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    சிவகங்கை மாவட்டம் துவார் ஊராட்சிக்கு தேசிய விருது கிடைத்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் ஊராட்சி உள்ளது. இது பூலாம்பட்டி, கருமிச்சான்பட்டி, துவார் ஆகிய 3  கிராமங்களை உள்ளடக்கியதாகும்.

    இந்த கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவராக செ.சரவணன் உள்ளார். ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதல் தான் மட்டு மில்லாமல் தன்னோடு இணைந்து பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் ஆகியோ ரோடு கைகோர்த்து பணியாற்ற தொடங்கினார். 

    மேலும் அடிப்படை கட்டமைப்பை இந்த கிராமத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காக 11 பேர் கொண்ட குழுவை நியமித்து அதற்கு தானே தலைவராக இருந்து இப்பகுதியில் அத்தியாவசிய தேவையாக கருதப்படுகின்ற நல்லகுடிநீர், மின்சாரம், தரமான சாலை முதலிய அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கவேண்டுமென தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். 

    இவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த போதிலும், தான் ஏற்படுத்திய குழுவோடு ஒன்றிணைந்து மாவட்ட நிர்வாகத்தை அவ்வப்போது அணுகி சுகாதாரம், கல்வி குறித்த விழிப்புணர்வு,  இளைஞர்களுக்கானவேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினார். 

    தான் பதவியேற்ற காலத்தில் 2 மகளிர் சுய நிதி குழுக்கள் இயங்கி வந்த நிலையில் தற்சமயம் 17-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கினார். இதுபோன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை இடைவிடாது நிறைவேற்றி வந்த சரவணனின் செயல்பாட்டின் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக முகமை திட்ட அலுவலர்களின் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வரிடம் தேசிய அளவிலான சிறந்த வளர்ச்சி திட்ட ஊராட்சிக்கான விருதினையும், பாராட்டு தலையும் பெற்றுள்ளார். 

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கூறுகையில், தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள அனைவரும் குழுக்களாக ஒன்றிணைந்து ஒற்றுமையோடு பாடுபட்டால் வரும் காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியையும் சிறந்த ஊராட்சியாக நிச்சயமாக மாற்ற முடியும் என்றார்.
    பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வினர் தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை கண்டும் காணாததுபோல் இருப்பது எப்படி? என சசிகலா கேள்வியெழுப்பியுள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் வேலு நாச்சியார், குயிலி ஆகியோரது நினைவிடத்தில் சசிகலா மாலை அனிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இணைவது நிச்சயம். அடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான். அதுவும் மக்கள் ஆட்சிதான். தி.மு.க.வினர் ஓராண்டு சாதனை என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் மக்கள் அதுபோல் நினைக்கவில்லை. அவர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும் ஆகும்.

    500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் ஒன்று கூட செய்யவில்லை. சொல்வதெல்லாம் நன்றாக சொல்கிறார்கள். ஆனால் செய்கை சரியாக இல்லை. எதுவும் செய்யவில்லை.

    பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வினர் தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை கண்டும் காணாததுபோல் இருப்பது எப்படி?

    ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடைபெறுவது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை.

    மாநில அரசை மத்திய அரசு நசுக்குவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.

    ஜெயலலிதா இருக்கும்போதும் வேறு அரசுதான் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் இதுபோல் குறை கூறியது இல்லை. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை தீவிரமாக கேட்டு பெற்றுக்கொடுத்தார்.

    அதுபோல் தி.மு.க.வினர் செய்ய வேண்டும். மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. ஓர் ஆண்டு கடந்துவிட்டது. மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள். அதை விடுத்து மத்திய அரசை குறைகூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள்?

    தி.மு.க.வினர் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். வெறுமனே பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறி பேசலாம். ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். ஆட்சி முடியும் வரை மத்திய அரசை குறைகூறிக்கொண்டே இருப்பார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்ைகயில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சிவகங்கை

    சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு ஊழியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலரின் விரோதப் போக்கினை கண்டித்தும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்தும் சத்துணவு ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். 

    ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராகப் பணிபுரிபவர் தொடர்ச்சியாக, ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படுகிறார். 

    ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நியாயமான கோரிக்கைகளை மறுத்தும், ஒருமையில் பேசியும், அவமானப்படுத்தி வரும் ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    திருப்பத்தூர் அருகே நகரத்தார் சார்பில் நூற்றாண்டு விழா நடந்தது.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி கிராமத்தில் சாலை திறந்ததன் நூற்றாண்டுவிழா நகரத்தார் சார்பில் கொண்டாடப்பட்டது. 

    நகரத்தார்கள் ஒன்றிணைந்து சொக்கலிங்க செட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு கோவிலூர் மெய்யப்ப சுவாமிகள், சொ. சுப்பையா, தேவகோட்டை எஸ்.ராமநாதன், சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர்  சேதுகுமணன், நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அவர்கள் பேசுகையில், கண்டவராயன்பட்டி என்ற குக்கிராமத்தில் 1893-ம் ஆண்டில் பிறந்த தெ.சி.நா. சொக்கலிங்கம் செட்டியார் சிறுவயதில் இருந்தே சேவை மனப்பான்மையோடு, இரக்க குணம் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார். அந்த காலத்தில் பெரிய நகரம் என்றால் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, போன்ற பகுதிகளுக்கு வணிக ரீதியாகவும் மற்றும் அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காகவும் மக்கள் நடை பயணமாகவும், மாட்டு வண்டிகளிலும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதை பார்த்த சொக்கலிங்கம் கடந்த 1922-ம் ஆண்டில் சொந்த நிதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து  தந்துள்ளார்.மேலும் சாலையின் இருபுறங்களிலும்   தொலைநோக்கு சிந்தனையோடு புளி, நாவல் போன்ற 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தது மட்டுமல்லாமல் அதை பராமரிக்கும் பணிக்காக வேலையாட்களையும் நியமித்தார். 

    அரசாங்கம் செய்ய வேண்டிய  அனைத்து சேவைகளையும் தனி ஒரு ஆளாக எந்த ஒரு நவீன  வசதிகளும் இல்லாத அக்காலத்தில் நிறைவேற்றியுள்ளார். இவரின் வள்ளல் தன்மையை  போற்றிப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும் என்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
    தேவகோட்மடை மஞ்சுவிரட்டு விழாவில் போதை ஆசாமிகள் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் ஏகாம் பரநாதர் கோவில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி த.மா.கா. மாநில செயலாளர் துரை கருணா நிதி தலைமையில் நடந்தது. 

    வடமாடு மஞ்சு விரட்டு விழாவில் திருவேகம்பத் தூரை சுற்றியுள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வடமாடு மஞ்சுவிரட்டு நடந்து கொண்டிருக்கும்போது போதை ஆசாமிகள் விழா நடைபெறும் இடத்தில் வழிநெடுகிலும் ரகளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர். 

    பின்னர் அருகில் நின்ற துரை கருணாநிதியின் 4 சக்கர வாகனத்தை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய போது இதனை கண்ட பொது மக்கள் போதை ஆசாமி களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து த.மா.கா. மாநில செயலாளர் துரை கருணாநிதி கூறுகையில், சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சீர்குலைக்கும் விதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. 

    அவற்றை தடுக்க தமிழக முதல்வர் சிறப்பு தனிப்படை அமைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதிக அளவில் பொது மக்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை சரிவர செய்யவில்லை என கூறினார்.

    ×