search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,476 ஆக உயர்வு

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,476 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 5,240 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 11,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 12,330 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 9,055 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 408 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 816 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் ஐ.சி.ஏ. காலனியை சேர்ந்த 34 வயது பெண் டாக்டர், அல்லம்பட்டியை சேர்ந்த 32 வயது பெண், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த 40 வயது, 44 வயது பணியாளர், அல்லம்பட்டி ராமன்தெருவை சேர்ந்த 72 வயது முதியவர், ரெயில்வேபீடர் ரோட்டை சேர்ந்த 55 வயது நபர், பரங்கிரிநாதர்புரம் தெருவை சேர்ந்த 46 வயது பெண், லட்சுமிநகரை சேர்ந்த 52 வயது நபர், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த 56 வயது நபர், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த 61 வயது பெண், கருப்பசாமிநகரை சேர்ந்த 13 வயது சிறுவன், ரோசல்பட்டி ஆதியார் தெருவை சேர்ந்த 60 வயது மூதாட்டி, சூலக்கரையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றும் 40,46 வயது பெண்கள், 24, 35, 45, 34, 44 வயது நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்த 70 வயது முதியவர், திருத்தங்கலை சேர்ந்த 30 வயது நபர், விளாம்பட்டியை சேர்ந்த 31 வயது நபர், சித்துராஜபுரத்தை சேர்ந்த 54 வயது நபர் உள்பட விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 207 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,476 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. முடிவுகளை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 2 பேர் பலியாகினர்.

    Next Story
    ×