என் மலர்

  செய்திகள்

  கவுண்டன்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
  X

  கவுண்டன்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுண்டன்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

  புதுச்சேரி:

  புதுவை சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் தோட்டம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி சேகரன். இவரது மகன் அரவிந்த் (வயது 23). இவர் சேலத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்தார்.

  இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை இவர் புதுவை சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

  கவுண்டன்பாளையத்தில் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரவிந்த் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

  இதில், தடுமாறி விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த அவரது நண்பர் அசோக் உடனடியாக அரவிந்தை மீட்டு அருகில் உள்ள கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரவிந்த் பரிதாபமாக இறந்து போனார்.

  இது குறித்த புகாரின் பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×