என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமியை தொடர்ந்து விமர்சித்தால் அன்பழகன் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிடுவோம்: காங்கிரஸ் எச்சரிக்கை
    X

    நாராயணசாமியை தொடர்ந்து விமர்சித்தால் அன்பழகன் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிடுவோம்: காங்கிரஸ் எச்சரிக்கை

    நாராயணசாமியை தொடர்ந்து விமர்சித்தால் அன்பழகன் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் பொறுப்பை திறம்பட செய்வது எவ்வாறு என டெல்லியில் நாராயணசாமி பயிற்சி பெற்று தான் ஆட்சியை திறம்பட நடத்துகிறார்.

    அவரிடம் அ.தி.மு.க.வில் உள்ள அன்பழகன் எம்.எல்.ஏ. போன்றோரின் நாடகம் எடுபடாது. அ.தி.மு.க. வினருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ‘சிம்ம சொப்பனமாக’ தான் இருப்பார்.

    கொல்லைபுறமாக பதவிக்கு வந்தவர் என்று வசைபாடும் அன்பழகன் எம்.எல்.ஏ.விற்கு அரசியல் வரலாறு தெரியாதா? புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் அரசியல் செய்து வரும் அன்பழகன் எம்.எல்.ஏ.விற்கு இந்தியா முழுமையும் மந்திரியாக இருந்தும் பல்வேறு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்தும் திறம்பட அரசியல் பணியாற்றிய நாராயணசாமி பற்றி பேச தகுதி இல்லை. நாராயணசாமியை வசைபாடி தன்னை பிரபல படுத்தி அரசியல் செய்யலாம் என்ற தவறான சிந்தனையை அன்பழகன் கைவிட வேண்டும்.

    கட்சி தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று திரண்டு தங்களது வீட்டை முற்றுகையிட தயங்க மாட்டோம். ஜான்குமார் பல்வேறு தொழில் செய்து பணம் ஈட்டியவர். அவர் பணத்திற்காக பேரம் பேச வேண்டும் என்றோ, பதவியை விட வேண்டும் என்றோ அவசியமில்லை. புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாராயணசாமி முதல்- அமைச்சராக தொடர வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தான் தனது எம்.எல்.ஏ. பதவியை விட்டு கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×