என் மலர்


யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் 'யாரடி நீ மோகினி'. இந்த படத்தில் தனுஷ்,நயன்தாரா,மற்றும் பலர் நடித்து உள்ளனர்.படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
"ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இருந்து இந்தபடம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ஆகும்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.ரூ.35கோடி வரை வசூல் செய்தது.
இந்த படத்தில் தனுஷ் எளிய நடுத்தர குடும்ப பையனாக நடித்து உள்ளார். ஒரு தகுதியான வேலையைப் பெறுவதற்கான திறமையும்,தகுதியும் அவருக்கு இல்லை.அவனது நண்பர்கள் அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது, அவன் தொடர்ந்து போராடுகிறான்.அவனுடைய அப்பா ஒரு ஆசிரியர், பொறுப்பின்மைக்காக அவனை எப்போதும் திட்டுவார். அவருக்கு ஆதரவாக 2 நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.அவர் நயன்தாராவை காதலிக்கும்போது அவரது வாழ்க்கையில் கடுமையான மாற்றம் ஏற்படுகிறது.
ஆனால் நயன்தாரா ஒரு தொழில் சிந்தனை கொண்ட பெண், அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதால் அவரது காதலை மறுக்கிறார்.அதன்பின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை விளக்கும் படமாக இது அமைந்து உள்ளது.