என் மலர்


விஜயபுரி வீரன்
கடந்த கால தொடர்பௌ உருவாக்கும் ஒரு மரகத டாலரை மையமாக வைத்து இயக்கப்பட்ட படம்
கதைக்களம்
ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்கள் புதைப்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்கள். அப்படி ஒரு இடத்தில் தொல்பொருள் ஆய்வை நடத்திக் கொண்டு இருக்கும்பொழுது இவர்களுக்கு ஒரு மரகத டாலர் கிடைக்கிறது. அந்த டாலர் கிடைத்த பிறகு ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்களுக்கு கடந்த கால நியாபகங்கள் கனவுப்போல் வருகின்றன. மரகத டாலரை எடுக்க ஒரு வில்லன் கும்பல் துரத்திக் கொண்டு இருக்கிறது. மரகத டாலருக்கும் ஜாக்கி சானுக்கும் என்ன தொடர்பு? கடந்த காலத்தில் ஜாக்கி சான் என்னவாக இருந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஜாக்கி சான் இரு காலத்திற்கும் வித்தியாசம் காண்பித்து நடித்துள்ளார். இளமை ஜாக்கி சான் ஆக்சன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். நாயகி குர்நெசன் அழகாக வந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் வகையில் இயக்குனர் ஸ்டான்லி டாங் கதைக்களத்தை அமைத்துள்ளர். இப்படம் நம்முடைய மகதீரா பாணியில் இருக்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். திரைக்கதை மெதுவாக செல்வது படத்தின் பலவீனம். டீஏஜிங் தொழில்நுட்பத்துடன் ஜாக்கி சானை 90 களில் இருந்த தோற்றத்தை மறுபடியும் மிக தத்ரூபமாக கொண்டு வந்ததுக்கு படக்குழுவிற்கு பாராட்டுகள்.
ஒளிப்பதிவு
அந்த காலக் கதையிலும் , இந்த கால கதையிலும் திரைப்படத்தின் லொகேஷன்கள் ஒவ்வொன்றையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜிங்கிள் மா.
இசை
நாதன் வாங் பின்னணி இசை சீன இசைக்கே உரிய அழகுடன் ஒலிக்கிறது.
தயாரிப்பு
Bona Film Group Services, Emperor Motion Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









