என் மலர்


விடாமுயற்சி
காணாமல் போன மனைவியை தேடும் கணவனின் கதை.
கதைக்களம்
நாயகன் அஜித்தும் நாயகி திரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 12 வருடம் ஆன நிலையில் திரிஷா அஜித்திடம் இருந்து விவாகரத்து கேட்கிறார். விவாகரத்து தர மறுக்கும் அஜித், ஒரு கட்டத்தில் திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்திற்கு சம்மதிக்கிறார்.
ஒருநாள் திரிஷா தன் தாய் வீட்டிற்கு செல்ல நினைக்கிறார். அதற்கு அஜித், தான் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். இருவரும் காரில் செல்லும் போது எதிர்பாராத விதமாக திரிஷா காணாமல் போகிறார்.
இறுதியில் அஜித், திரிஷாவை கண்டுபிடித்தாரா? திரிஷாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அஜித், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரிஷாவிடம் காதல், திரிஷா காணாமல் போன பிறகு பதட்டம், பரிதவிப்பு, திரிஷாவை காப்பாற்ற போராடுவது, என நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக நடனம், ஆக்ஷனில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் திரிஷா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார் ரெஜினா. வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் அர்ஜுன். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் ஆரவ்.
இயக்கம்
கடத்தல், பணம் பறிக்கும் கும்பலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. முதல் பாதி திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனம். முதல் பாதியில் திரையில் வருபவர் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டாம் பாதி திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்து இருக்கிறார். கார் சண்டைக்காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இசை
அனிருத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. இரண்டாம் பாதி பிண்ணனி இசையில் மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
லைக்கா நிறுவனம் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரித்துள்ளது.
super
செம
SUPER ACTING THALA
Ajith Kumar acting super











